Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

விஜய்யின் ‘வாரிசு’ உடன் மோதும் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’-அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தெலுங்கில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டின்போது, பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படமும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வரசுடு’ என்றப் பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், விஜய்யின் ‘வாரிசு’ படத்தால், சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் படங்களின் வசூல் பாதிக்கும் என்று தெலுங்கு திரையுலகம் கருத்து தெரிவித்தது. மேலும், "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி மற்றும் தசரா ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.



இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையின்போது அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், திட்டமிட்டப்படி தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், வரலஷ்மி சரத்குமார், துனியா விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். பாலகிருஷ்ணாவுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments