அதற்கமைய,
- 63 வயதை பூர்த்தி செய்தோருக்கு டிசம்பர் 31 இற்கு முன் ஓய்வு
- 62 வயதை பூர்த்தி செய்தோருக்கு 63 வயதில் ஓய்வு
- 61 வயதை பூர்த்தி செய்தோருக்கு 62 வயதில் ஓய்வு
- 60 வயதை பூர்த்தி செய்தோருக்கு 61 வயதில் ஓய்வு
- 59 வயதை பூர்த்தி செய்தோருக்கு 60 வயதில் ஓய்வு
பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இது தொடர்பில் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 60 வயதில் அரச ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த அதி விசேட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், அவ்வர்த்தமானிக்கு எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதி வரை இடைக்கால உத்தரவு பிறப்பித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.
நேற்றையதினம் (14) மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியிருந்தது.
0 Comments