Trending

6/recent/ticker-posts

Live Radio

மலேஷியாவுக்கு சுற்றுலா வீசாவில் இலங்கையர்களை அனுப்பும் மோசடி முயற்சியும் அம்பலம்…!


சுற்றுலா வீசா மூலம் இலங்கையர்களை மலேஷியாவுக்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி அம்பலமாகியுள்ளது.

இந்த மோசடியை நடத்தும் நபர்களை கைது செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

மலேஷியாவுக்கு செல்வதற்காக 14 பேர் கொண்ட இலங்கையர்கள் நேற்று வியாழக்கிழமை (1) கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருத்தபோது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களில் ஒன்பது பேர் சுற்றுலா விசாவில் மலேஷியாவுக்கு வேலைக்குச் செல்ல முயன்றதாகவும் அதில் நான்கு பெண்களும் 5 ஆண்களும் அடங்குவதாகவும் தெரிய வந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments