பீஜிங் வரையான பட்டுப்பாதை வர்த்தகத்தை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு ஆப்கானிஸ்தானின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் நூருத்தீன் அஸீஸி சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வகான் வழித்தடம் அல்லது பட்டுப்பாதையின் ஊடாக இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
உலகளாவிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலோபாயத்தின் கீழ் சீனா இந்த பட்டுப்பாதை முயற்சியை முன்னெடுத்துள்ளது.
0 Comments