டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படாததால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்.
டீசல் விலை குறைவினால் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படுமா என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் "அத தெரண" வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments