இந்தியா மற்றும் சீனாவில் கொவிட்-19 தொற்றுக்கள் அதிகரித்த போதிலும், புதிய ஆபத்தான கொவிட் உருமாற்றம் இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார். ஆனாலும் அதிகரித்து வரும் மாறுபாடுகளைக் கண்காணிக்க இலங்கை
யின் செயல்முறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா தற்போது ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை, ஆனால் சீனாவின் நிலை மோசமடைந்து கொண்டிருப்பது இந்தியர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது .
சீனாவில் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் தற்போதைய SARs-Cov2 வகைகள் இந்தியா உட்பட பல நாடுகளில் பல மாதங்களாக பரவி வருகின்றன. இலங்கையிலும் இந்த புதிய Omicron மாறுபாடுகள் பல இருந்தன,
ஆனால் இலங்கையர்கள் இரண்டு தடுப்பூசிகள், பூஸ்டர்கள் மற்றும் கூடுதல் இயற்கை தொற்று, தூண்டப்பட்ட பாதுகாப்புக்கான அணுகலை பெற்றுள்ளனர். எனவே தற்போதைக்கு நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் இல்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments