Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் வரலாற்று முக்கியம் வாய்ந்த அறிவிப்பு…!


அணுக்கரு இணைவு தொழில்நுட்பப் போட்டியில் பாரிய முன்னேற்றம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

எல்லையற்ற தூய்மையான ஆற்றலை அடையும் எதிர்பார்ப்புடைய இந்தத் தொழில்நுட்பத்தை பெறும் முயற்சி பல தசாப்தமாக இடம்பெற்று வருகிறது.

அணுக்கரு இணைவு சூரியன் மற்றும் ஏனைய நட்சத்திரங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் செயல்முறையாக உள்ளது. அணுக்கரு இணைவு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இணைப்பதன் மூலம் ஹீலியத்தை உருவாக்குகிறது. மேலும் சூரியன் எவ்வாறு வெப்பத்தையும் ஒளியையும் உருவாக்குகிறது என்பதைப் போலவே அதிக அளவு ஆற்றலை வெளியிடுகிறது.

இது முடிவில்லாத மலிவான, சுத்தமான மற்றும் கார்பன் இல்லாத ஆற்றலை பெற வழிவகுப்பதோடு உலகின் அடிப்படைகளையே மாற்றும்.

தற்போது அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் அணுவை பிரிக்கும் தொழில்நுட்பத்தால் அதிக கழிவுகள், நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்தும் கதிர்வீச்சை உருவாக்குகிறது.

இதற்கு மாறான அணுக்கரு இணைவு சிறிய அளவான குறுகிய கால கதிர்வீச்சு கழிவுகளையே வெளிப்படுத்துவதோடு அதிக ஆற்றலை தருவதாக உள்ளது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள லோரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வுகூட விஞ்ஞானிகள், அணுக்கரு இணைவு தொழில்நுட்பம் மூலம் அதிக ஆற்றலை உற்பத்தி செய்துள்ளனர் என்று கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விரிவான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments