வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வ மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகே வால்டாக்ஸ் சாலை பகுதியில் உள்ள அண்ணா பிள்ளை தெருவில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த தெருவில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
மேலும் வாகன ஓட்டிகளும் மழைநீரில் வாகனங்களை இயக்குவதற்கு சிரமம் அடைந்துள்ளனர். சாதாரண மழைக்கே இங்கு மழைநீர் தேங்கி விடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments