Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

குளிர் காலத்தில் ஏன் தூக்கம் அதிகமாக வருகிறது தெரியுமா? நடுங்க வைக்கும் காரணங்கள்!குளிர்காலம் வந்துவிட்டாலே பெரும்பாலானவர்கள் போர்வைக்குள் ஒளிந்துகொள்வர். உடல் வெப்பம் குறைந்துபோகும் என்பதால் வீட்டிற்குள்ளேயே கதகதப்பாக இருக்கத்தோன்றும். அதிலும் குறிப்பாக மற்ற சீசன்களைவிட குளிர்காலத்தில் தூக்கக் கலகத்திலேயே இருப்பர். மேலும் மற்ற நாட்களைவிட சோம்பேறித்தனமாகவும் உணர்வர். இதனால் நிறையப்பேரின் கார்டியன் சுழற்சியானது பாதிக்கப்படும்.

குளிர் ஏன் அதிகம் தூங்கவைக்கிறது?

எப்போது
தூங்கவேண்டும் மற்றும் எப்போது எழ வேண்டும் என நமது உடல் தீர்மானித்து
அதன்படி இயங்குவதே சர்கார்டியன் தூக்க சுழற்சி என்கிறது Oxford Sparks.
மனிதர்கள் பொதுவாக இருட்டில் தூங்கி, வெளிச்சமான நேரங்களில் ஆக்ட்டிவாக
இருப்பர். இருட்டானது தூக்க ஹார்மோனான மெலட்டோனின் சுரப்பை ஊக்குவிக்கிறது.
இந்த ஹார்மோன் தூக்க சுழற்சியை சீராக்குகிறது. வெளிச்சத்தில் இந்த
ஹார்மோன் சுரப்பு குறைவதால் உடல் சுழற்சியும் மெதுவாகிறது.

எப்படியாயினும்
குளிர்காலத்தில் பகல்நேரம் குறைவதால் உடலில் செரட்டோனின் ஹார்மோன் சுரப்பு
குறைந்து மன அழுத்தம் மற்றும் மன பதற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல்
இயக்கமும் மொத்தமாக குறைகிறது.

உடலை ரிலாக்ஸ் செய்து தூக்கத்தை
வரவைப்பதில் மெலட்டோனின் என்கிற ஹார்மோன் முக்கியப்பங்கு வகிக்கிறது.
மெலட்டோனின் பெரும்பாலும் கண்களில் உள்ள ஒளிச்சேர்க்கை செல்களால்
ஆளப்படுகிறது என்கிறது ஹெல்த்லைன். இது சூரிய ஒளியின் குறைவைக் கண்டறிந்து,
மூளையின் Suprachiasmatic nucleus அல்லது SCN பகுதிக்கு செய்தி
அனுப்புகிறது.

image

SCN
செய்தியை பெற்றவுடன், மூளையிலுள்ள பினியல் சுரப்பியை தூண்டி, மெலட்டோனின்
ஹார்மோனை சுரக்க செய்கிறது. இந்த செயல்முறையானது பொதுவாக வெயில்காலங்களில்
சிறப்பாகவும், குளிர்காலங்களில் மெலட்டோனின் சுரப்பு அதிகமாகவும்
இருப்பதால் எப்போதும் தூக்கம் வருவதைப்போன்ற உணர்வே ஏற்படுகிறது.

வைட்டமின் டி குறைபாடும் பிரச்னைகளும்

குறைந்த
சூரிய ஒளியானது வைட்டமின் டி குறைபாட்டுக்கு காரணமாகிறது. பெரும்பாலும்
சூரிய ஒளி சருமத்தில் படுவதால் உருவாகிறது வைட்டமின் டி. குடல்கள்
கால்சியம்சத்தை உறிஞ்சுவதை வைட்டமின் டி ஊக்குவிக்கிறது. எலும்புகளுக்குத்
தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பேட் உடலுக்கு கிடைப்பதை உறுதிசெய்கிறது.
மேலும் தசை பிடிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. குழந்தைகளுக்கு
ரிக்கெட்ஸ், பெரியவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய
ஆஸ்டியோமலாசியா போன்றவற்றிலிருந்து வைட்டமின் டி பாதுகாப்பு அளிக்கிறது.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை பெரியவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ்
வராமல் பாதுகாக்கிறது.

ஆர்த்ரிட்டிஸ் பிரச்னையை அதிகரிக்கிறதா?

குளிர்காலத்தில்
பெரும்பாலும் ஆர்த்ரிட்டிஸ் வலி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
இருக்கிறது. ஏனெனில், பாரோமெட்ரிக் அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கமானது
பாதிப்பை ஏற்படுத்துகிறது.

image

குளிர்காலத்தில் சோம்பலை போக்குவது எப்படி?

 • பகல்நேரங்களில் ஜன்னல்களின் திரையை அகற்றி, அறையை வெளிச்சமாக வைத்திருக்கவும்.
 • எவ்வளவு குளிராக இருந்தாலும், டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடவும். கட்டிலிலேயே அமரவேண்டாம்.
 • அலுவலத்தில்
  பணிபுரிந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை எழுந்து 5-10 நிமிடங்கள்
  நடக்கவும். குறிப்பாக மதிய உணவுக்கு பிறகு இதனை செய்யவும்.
 • விடுமுறை நாட்களாக இருந்தாலும் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்கவேண்டாம்.
 • எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளையே உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை நிறைந்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.
 • தினசரி காலை, மாலை வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதை நிறுத்தவேண்டாம். இது சில கலோரிகளை எரிக்க உதவும்.
 • தாகம் இல்லை என்றாலும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.
 • ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்
 • வெளியே சென்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுங்கள்
 • முடிந்தவரை சூரிய ஒளியில் சென்று, இயற்கையான முறையில் வைட்டமின் டி உடலில் சேர்வதை உறுதிசெய்யுங்கள்.

Post a Comment

0 Comments