Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் அல்லது இரவில் மழை..!


இன்றையதினம் (14) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும், முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Post a Comment

0 Comments