Trending

6/recent/ticker-posts

Live Radio

யாழில் டிக்டொக்கால் வந்தவினை...!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு டிக்டொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மோட்டார் சைக்கிளுடன் கடலில் வீழ்ந்துள்ளார்.

அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர்.

Post a Comment

0 Comments