இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு இன்று (03) சனிக்கிழமை காலை கல்முனை வலய நிந்தவூர் கமு/கமு/அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூரின் பங்களிப்புடன், அஸ்ஸெய்யத் றஸ்மி மௌலானாவின் ஒருங்கமைப்பில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீமின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பொதுச்செயலாளர் அஷ்ஸெக் மௌலவி அர்கம் நூறாமித், முஸ்லிம் சமய பண்பாட்டாலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம் ஹனிபா, கல்முனை கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர்கள், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், மாணவ தலைவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை கமு/கமு/அல் - அஸ்ஹர் பாடசாலையிலிருந்து மாணவ பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்நிகழ்வில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மறைந்த அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிபிரியின் அறிவுக்களஞ்சியம் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூருள் ஹுதா உமர், எஸ். அஷ்ரப்கான்
0 Comments