Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இருமும்போதும், தும்மும்போதும் நெஞ்சு வலிக்கிறதா? - ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!



இருமும்போதும் தும்மும்போதும் நெஞ்சுவலி ஏற்படுவதை பொதுவான அறிகுறியாக எண்ணி நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். ஆனால் இந்த பொதுவான அறிகுறியானது மிக மோசமான நுரையீரல் நோயான ப்ளூரிஸியின்(Pleurisy) அறிகுறிகளாகவும் இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இருமல் மற்றும் தும்மல் தவிர, சில நேரங்களில் மூச்சுவிட்டால்கூட கடுமையான வலி ஏற்படும். மேலும், மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் தோள்ப்பட்டையில் கடுமையான வலி போன்றவையும் ப்ளூரிஸியின் அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது. இந்த அறிகுறிகள் மோசமாவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ப்ளூரிஸி என்றால் என்ன?

நுரையீரலை
சுற்றியுள்ள மெல்லிய படலமான ப்ளூரா என்று சொல்லக்கூடிய நுரையீரல் சவ்வில்
ஏற்படும் அழற்சியே ப்ளூரஸி என்கிறது John Hopkins Medicine.

ப்ளூராவின் அடுக்குக்கும், மார்புக் குழியை இணைக்கும் அடுக்குக்கும் இடையே
ப்ளூரல் ஸ்பேஸ் எனப்படும் மிக மெல்லிய இடைவெளி இருப்பதாக மருத்துவர்கள்
கூறுகின்றனர். இந்த இடைவெளியில் ஒருவித திரவம் நிரம்பியிருக்கிறது எனவும்,
அந்த திரவம்தான் இரண்டு அடுக்குகளையும் இணைப்பதுடன், நுரையீரல் சீராக
சுவாசிக்கவும் உதவுகிறது என்கின்றனர்.

ப்ளூரஸி பிரச்னை ஏற்படும்போது,
தொற்று உருவாகி, அழற்சி ஏற்பட்டு, ஒவ்வொரு முறையும் மூச்சுக்காற்றை
உள்ளிழுக்கும்போதும், வெளிவிடும்போதும் இரண்டு அடுக்குகளும் சாண்ட் பேப்பர்
உரசுவதுபோன்று ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்கிறது. இதனால் அதீத வலி ஏற்படும்.
நிமோனியா போன்ற நோய்த்தொற்றுகளே ப்ளூரிஸிக்கு மிகவும் பொதுவான காரணமாகும்.

ப்ளூரஸியால்
ஏற்படும் வலி மிகவும் மோசமாகும்போது அது மேற்புற உடலின் இயக்கத்தை
குறைப்பதுடன், அந்த வலியானது முதுகு, தோள்ப்பட்டைக்கும் பரவுகிறது என்கிறது
மாயோ க்ளினிக்.

image

அறிகுறிகள்

மருத்துவ
நிபுணர்களின் கூற்றுப்படி, ப்ளூரிசியால் பாதிக்கப்படும் போது அனுபவிக்கும்
வலி மிகவும் கொடூரமானது மற்றும் இருமல் அல்லது தும்மும்போது மேலும்
மோசமாகலாம். இது மெதுவாக பரவி, கீழ்க்கண்ட பிற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

  • மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல்
  • இருமல்
  • குளிர் காய்ச்சல்
  • படபடப்புடன் மூச்சு விடுதல்
  • வறட்சியுடன் கூடிய தொண்டை வலி
  • மூட்டுகளில் வீக்கம்

ப்ளூரஸிக்கு சிகிச்சை 

ப்ளூரல்
ஸ்பேஸில் உள்ள திரவத்தை அகற்ற பொதுவாக Thoracentesis என்ற சிகிச்சைமுறையே
ப்ளூரஸிக்கு அளிக்கப்படுகிறது. சிறிய ஊசி அல்லது மெல்லிய, ப்ளாஸ்டிக்
குழாயை மார்பின் பின்பகுதியிலிருந்து விலா எலும்புகளுக்குள் செலுத்தி
அளிக்கப்படும் சிகிச்சை இது. மார்பிலிருந்து திரவத்தை வெளியேற்ற அதில் ஒரு
சிரிஞ்ச் இணைக்கப்பட்டிருக்கும், அதன்பிறகு, அறிகுறிகளைப் போக்க மருத்துவர்
கீழ்க்கண்டவற்றை பரிந்துரைக்கலாம்.

  • வலியைக் கட்டுப்படுத்த அசெட்டமினோஃபென் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள்
  • இருமலைக் கட்டுப்படுத்த கோடீன் அடிப்படையிலான இருமல் சிரப்கள்
  • வலி அதிகமாக உள்ள பக்கத்தில் திரும்பி படுத்துக்கொள்ளுதல்
  • சளியை அகற்ற வலி குறையும்போது அழுத்தமாக சுவாசித்தல்

image

ப்ளூரஸிக்கு சரியாக நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் கீழ்க்கண்ட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

1. நுரையீரல் அடைப்பு
2. ப்ளூரல் காவிட்டி பகுதியில் சீழ் பிடித்தல்
3. ரத்த ஓட்டம் திடீரென மெதுவாதல்
4. செப்சிஸ் தொற்றுக்கு வழிவகுக்கும்
5. ப்ளூரல் காவிட்டி பகுதியில் அழற்சி

இதுபோன்ற மோசமான விளைவுகளை தவிர்க்க சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை எடுப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

Post a Comment

0 Comments