Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

‘துணிவு’ முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு - ‘ஆலுமா, டோலுமா’வை மிஞ்சுமா ‘சில்லா, சில்லா’!



அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ‘துணிவு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகிறது. ‘வாரிசு’ படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டநிலையில், ‘துணிவு’ படம் எந்த தேதியில் வெளியாகிறது என்று இதுவரை சர்ப்ரைஸாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் அழ்த்தியுள்ள நிலையில், அஜித்தின் ‘துணிவு’ படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருப்பது அவரது ரசிகர்களை சற்றே ஏமாற்றத்தில் ஆழ்த்தி வந்தது.



இந்நிலையில், நேற்று விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் வெளியானநிலையில், அஜித்தின் ‘துணிவு’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியானது. 


இதனைத் தொடர்ந்து இணையதளம் ஒன்றிற்குப் பேட்டியளித்த இயக்குநர் ஹெச். வினோத், “Thunivu is a game of villains...அது ஒரு அயோக்கர்களின் ஆட்டம்” என்று படம் குறித்த தகவல் தெரிவித்து எதிர்பார்ப்புகளை மேலும் கூட்டியிருந்தார். மேலும், ‘வலிமை’ படத்தில் சந்தித்த சில விமர்சனங்களை கருத்தில் கொண்டு, இந்தப் படத்தில் கூடுதலாக மெனக்கெடல் எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் ஹெச். வினோத்.



இந்நிலையில், ஜிப்ரான் இசையில், அனிருத் பாடிய ‘சில்லா சில்லா’ பாடல் வருகிற டிசம்பர் 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். இந்தப் பாடல் படத்தில் அஜித்தின் அறிமுகப் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, ‘வேதாளம்’ படத்தில் ‘ஆலுமா, டோலுமா’ பாடலை அஜித்துக்காக பாடியிருந்தார். அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனால் ‘சில்லா.. சில்லா’ பாடலுக்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நடிகர் அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர், ‘நேர்கொண்டப் பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக ‘துணிவு’ படத்திற்காக இணைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments