Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

உலக கிண்ண கனவு: கண்ணீருடன் ரொனால்டோ…!


கத்தார் நாட்டில் இடம்பெறும் 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக துவங்கிய போட்டியில் போர்ச்சுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

உலகக் கோப்பையில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்ததை அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் தன்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்ததாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது இன்ஸ்டகிராம் மற்றும் பேஸ்புக்கில் இன்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அந்த பதிவில், "போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன்.

துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது. போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

16 ஆண்டுகளுக்கும் மேலாக உலகக் கோப்பையில் நான் அடித்த 5 ஆட்டங்களில், எப்போதும் சிறந்த வீரர்களின் பக்கத்திலும், மில்லியன் கணக்கான போர்ச்சுகீசியர்களின் ஆதரவிலும், நான் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன்.

போர்ச்சுகலுக்கு எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை. எப்போதும் அனைவரின் நோக்கத்திற்காகவும் போராடும் ஒருவனாக இருக்கிறேன். என் சக வீரர்கள் மற்றும் என் நாட்டுக்காக நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.

இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது.. நன்றி போர்ச்சுகல்" என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

avatar
Star FM