உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் ஆடம்பரமான நாடுகளின் பெயர்களை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் வழக்கம் போல், அமெரிக்கா தான் முதலிடத்தில் நிச்சயம் இருக்குமென ஈஸியா கெஸ் செய்துவிடலாம். ஆனால், இந்த முறை அமெரிக்காவுக்கு இணையாக சிங்கப்பூர் வளர்ந்துள்ளது.
தற்போது உலகிலேயே மனிதர்கள் வாழ்வதற்கு விலைவாசி உயர்வு கொண்ட நகரங்களாக சிங்கப்பூரும், அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடந்த 10 ஆண்டுகால ஆய்வு அறிக்கையில் 8 முறை முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் உயர் பணவீக்கம் நியூயார்க் பட்டியலில் முதலிடத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, 2022ம் ஆண்டிகிற்கான, உலகின் மிக விலையுயர்ந்த பெரும் நகரம் குறித்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த இஸ்ரேலிய தலைநகர் (பொருளாதார) டெல் அவிவ் தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. மேலும் தரவரிசையில் நியூயார்க் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த டெல் அவிவ் இப்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, உலகின் மிகப்பெரிய நகரங்களில் சராசரி வாழ்க்கைச் செலவு இந்த ஆண்டு 8.1% அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, உலகளவில் 172 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் 400க்கும் மேற்பட்ட தனிப்பட்ட விலைகளை ஒப்பிடுகிறது. உக்ரைனில் நடந்த போர் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் கோவிட் தாக்கம் ஆகியவை அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள காரணிகளாக என EIU ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இதன்படி, 2022ம் ஆண்டு தரவரிசையில் உலகின் மிக விலையுயர்ந்த முதல் 10 நகரங்கள்..
1 - சிங்கப்பூர்
நியூயார்க்
( முதலிடத்தை சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் கூட்டாக முதலிடத்தில் உள்ளதால் இரண்டாம் இடம் இல்லை )
3- டெல் அவிவ், இஸ்ரேல்
4- ஹாங்காங், சீனா -
4- லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா
6- சூரிச், சுவிட்சர்லாந்து
7- ஜெனீவா, சுவிட்சர்லாந்து
8- சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா
9- பாரிஸ், பிரான்ஸ்
10- கோபன்ஹேகன், டென்மார்க்

0 Comments