Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆப்கானிய பெண்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குச் செல்லவும் தடை...!


ஆப்கானிஸ்தானின் பெண்கள் அரச சார்பற்ற தொண்டு நிறுவினங்களில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலிபான் ஆட்சியாளர்களின் அந்த முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தலிபான்களின் புதிய விதியால், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் உதவிப் பணிகள் பாதிக்கப்பட்டு நிலைமை மேலும் மோசமடையும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அல்லது சுமார் 25 மில்லியன் பேர் மனிதநேய உதவிகளைச் சார்ந்து இருக்கின்றனர்.

தலிபான்களின் தடை பல்வேறு திட்டங்களைப் பாதிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

அரச சார்பற்ற அமைப்புகளில் வேலை செய்யும் பெண்கள் சிலர் முறையாக ஹிஜாப் அணிவதில்லை என்று புகார் செய்யப்பட்டதால் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.



விதிகளை மீறும் அமைப்புகளின் செயல்பாட்டு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தலிபான்கள் கூறினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள 180க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற அமைப்புகளுக்கு புதிய கட்டுப்பாடு பொருந்தும். ஆனால் பட்டியலில் ஐக்கிய நாடுகள் சபை சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

பெண்கள் பல்கலைக்கழகம் செல்ல தடை விதிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொரும்பாலான மாகாணங்களில் உயர் பாடசாலைகள் பெண்களுக்கு மூடப்பட்டிருப்பதோடு பெண்கள் பூங்காக்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments