Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆண்களை பாதிக்கும் விதைப்பை புற்றுநோய் - கொய்யா இலையில் தீர்வா?2020களின் ஆரம்பத்தில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்றானது உலகையே புரட்டிப்போட்டுவிட்டது. மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகள் மற்றும் வீட்டு மருந்துகளின் மகத்துவத்தையும் நமக்கு உணர்த்திவிட்டது. ஆங்கில மருந்து மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தக்கூடிய மேற்கத்திய நாடுகள் கூட இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தை புரிந்துகொண்டன.

அப்படி மருத்துவகுணம் வாய்ந்த, எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று கொய்யா.
கொய்யா பழம் மட்டுமல்ல; அதன் இலைகளிலும் அதீத மருத்துவகுணங்கள்
நிரம்பியிருக்கிறது. மிர்டேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த சைடியம் குஜாவா
எல் என்று அழைக்கப்படுகிற கொய்யா, வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம்
வளரக்கூடியது. இது ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி
சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.

பாரம்பரியமாக வயிற்றுப்போக்கு,
காயங்கள், ருமாட்டிசம்(மூட்டு வலி), நுரையீரல் பிரச்னைகள், அல்சர் மற்றும்
பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதற்கு காரணம்
கொய்யாவிலுள்ள ஃப்ளவனாய்டுகள், குவாவோலிக் அமிலம், குவானோயிக் அமிலம்,
குஜாடியல், குஜாவெரின் மற்றும் இதுபோன்ற பல முக்கிய உயிரியல் கூறுகள்
இருப்பதுதான். கொய்யாவிலுள்ள மருந்தியல் மற்றும் உயிரியல் திறன்களால் இது
சிறந்த சிகிச்சைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், வயிற்றுப்போக்கு,
நுண்ணுயிர் கிருமிகள், அழற்சிகள், ஹெபடோப்ரோடெக்டிவ், கேன்சர், அழுத்தம்
போன்றவற்றிற்கு எதிர்ப்புப்பொருளாக செயல்படுகிறது.

image

கொய்யா இலையின் மருத்துவ குணங்கள்:

கொய்யாப்பழம்
நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதுதான். ஆனால் கொய்யா இலைகளில்
மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. பொதுவாக
கொய்யா இலையானது ஹெர்பல் டீ, சருமத்தின்மீது பூசுதல் அல்லது சாப்பிடுதல்
போன்ற வழிகளில் உட்கொள்ளப்படுகிறது.

1. காயங்கள்:
கொய்யா இலையில் ஆண்டி பாக்டீரியல் தன்மை இருப்பதால், அறுவைசிகிச்சை
காயங்கள், தீக்காயங்கள் மற்றும் சருமத்தின் மீதான தொற்றுக்கள் போன்றவற்றை
குணப்படுத்துகிறது. கொய்யா இலைகளை பைடோகெமிக்கல் ஸ்க்ரீனிங்கிற்கு
உட்படுத்தியதில், அவற்றில் நுண்ணுயிர்க்கொல்லி கூறுகள் இருப்பது
கண்டறியப்பட்டது.

2. கல்லீரல் மற்றும் குடல்கள்:
அலெக்சாண்டியா மற்றும் தமன்ஹர் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில்,
கொய்யா இலையானது குடல் தொந்தரவுகள் அல்லது கல்லீரல் சமநிலையின்மை
பிரச்னைக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் என தெரியவந்தது. குறிப்பாக கொய்யா
இலையானது தனியாகவோ அல்லது மெட்ரானிடஸோலுடன் இணைந்தோ, ட்ரோபோசோயிட்
எண்ணிக்கை குறைத்தல் உட்பட பல குறிப்பிடத்தக்க மாற்றங்களை
ஏற்படுத்தக்கூடியது என்பதையும் அந்த ஆய்வு முடிவுகள் காட்டின. மேலும்,
இதில் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் இருப்பதையும் ஆய்வு முடிவுகள் காட்டின.
Giardia-induced gut atrophy பிரச்னையையும் கொய்யா இலைகள்
குணப்படுத்தக்கூடியது. கொய்யாவில் கெட்ட கொழுப்பு மற்றும்
ட்ரைகிளிசைரைடுகளின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது.

மேலும், இது
கல்லீரலின் ஆக்சிஜனேற்றத்தை ஊக்குவிக்கிறது. ஜியார்டியாசிஸ் என்பது ஒருவித
குடல் தொற்று. இந்த தொற்றால் வயிறு பிடிப்பு, வயிற்றுபொருமல், குமட்டல்
மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்த பிரச்னைக்கு
காரணமான நுண் ஒட்டுண்ணியை கொய்யா இலைச் சாறு அழிக்கிறது.

image

3. கேன்சர்: ஆண்களுக்கு
ஏற்படும் விதைப்பை புற்றுநோய் கொய்யா சாறு சிறந்த தீர்வை கொடுக்கும் என
விளக்கியுள்ளது 2010ஆம் ஆண்டு கேன்சர் சிகிச்சை மருந்து நிறுவனமான அட்மாக்
ஆன்காலஜி நடத்திய ஆய்வு. மேலும், இது கட்டிகளின் அளவை குறைக்கும்
வல்லமையுடையது எனவும் கூறியுள்ளது. 2012ஆம் ஆண்டு Journal of Medicinal
Food நடத்திய மற்றொரு ஆய்வும், கொய்யா இலைச் சாறு புராஸ்டேட் கேன்சருக்கு
எதிராக எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கியுள்ளது.

4. ஹைபர்டென்ஷன்:
உயர் ரத்த அழுத்த நோயாளிகளை குரூப் ஏ மற்றும் குரூப் பி என பிரித்து
அவர்களில் ஏ குரூப்புக்கு மட்டும் கொய்யா மருந்துகளை தினசரி உட்கொள்ளவைத்து
ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 12 வாரங்கள் கழித்து பரிசோதித்ததில், குரூப்
பியை விட ஏவில் உள்ளவர்களுக்கு மொத்த கொழுப்பு (9.9 சதவீதம்),
ட்ரைகிளிசரைடுகள் (7.7 சதவீதம்) மற்றும் ரத்த அழுத்தம் (9.0/8.0 மிமீ
எச்ஜி) ஆகியவை கவனிக்கத்தக்க வகையில் குறைந்திருந்தது. லிப்போபுரோட்டீன்
கொலஸ்ட்ரால் (8.0 சதவீதம்) அதிகரித்திருந்தது.

5. ரத்த சர்க்கரை அளவு:
நீரிழிவு நோயாளிகளுக்கு தினசரி கொய்யா இலைகளை சாப்பிட சொல்லி
மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு. காரணம், இன்சுலின் சுரப்பை
கட்டுப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் திறன்
கொய்யாவுக்கு உண்டு.

6. மாதவிடாய் வலி:
மெக்சிகோவின் தொற்றுநோயியல் மற்றும் சுகாதார சேவைகள் ஆராய்ச்சி பிரிவு, 197
பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களுக்கு தினசரி 6 mg கொய்யா சாறை
குடிக்கக் கொடுத்தது. இது வழக்கமான மருந்துகளைவிட குறிப்பிடத்தக்க வகையில்
வலியை குறைப்பது தெரியவந்தது. மேலும் கருப்பை பிடிப்புகளையும் குறைத்தது.

image

7. பரு மற்றும் சரும பிரச்னைகள்:
முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை திறம்பட கொல்கிறது கொய்யா இலைச்
சாறு என்கிறது ஒரு ஜோர்தான் ஆய்வு. கொய்யாவிலுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு
மற்றும் அழற்சி எதிர்ப்புத் தன்மையானது பாக்டீரியாக்களை அழிக்கும்
குணம்கொண்டது. மேலும், கொய்யா இலைச்சாறானது சுருக்கங்கள் மற்றும் வயதான
தோற்றத்தை குறைக்கும் என விளக்கியுள்ளது ஜப்பானிய ஆய்வு.

8. நோயெதிர்ப்பு சக்தி:
கொய்யா இலையில் அதிகளவு ஆண்டி ஆன்க்சிண்டடுகள், பெனோலிக் கூறுகள் மற்றும்
உயிரியல் மூலக்கூறுகள் உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும்.

9. முடி உதிர்தல்: ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை எடுத்து சுத்தமாக கழுவி ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இதனை வடிகட்டி ஆறவிடவும். இதனை முடியின் வேர்க்கால்களிலிருந்து நுனிவரை தடவவும்(இதனை தடவும் முன் தலை சுத்தமாக இருக்கவேண்டும். கண்டிஷ்னரை தவிர்த்துவிடலாம்). இதனை அப்படியே குறைந்தது 2 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் விட்டுவிடவும். மறுநாள் வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியை கழுவவும்.

Post a Comment

0 Comments