Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



FIFA: 3வது இடத்துக்கான போட்டி: குரோஷியா-மொராக்கோ அணிகள் நாளை மோதல்...!


3-வது இடத்துக்கான போட்டி நாளை நடக்கிறது.

22-வது உலக கோப்பை கால்பந்து கத்தார் நாட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக 3-வது இடத்துக்கான போட்டி நாளை நடக்கிறது.

இதில் அரை இறுதியில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது. அரை இறுதியில் குரோஷியா, அர்ஜென்டினாவிடமும், மொராக்கோ பிரான்சிடமும் தோல்வி அடைந்தன. லீக் போட்டியின் போது குரோஷியாவும், மொராக்கோவும் 'எப்' பிரிவில் இடம் பெற்று இருந்தன.

இப்போட்டி நாளை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

Post a Comment

0 Comments