Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

Mandous சூறாவளி இன்று நள்ளிரவு அளவில் தமிழ்நாட்டின் புதுச்சேரியை கடக்கிறது…!


தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு வடகிழக்காக 240 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள 'Mandous' (மாண்டஸ்) எனும் பாரிய சூறாவளியானது நேற்று இரவு 11.30 மணிக்கு வடஅகலாங்கு 10.60 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 82.30 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.

அது மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் இன்று (09) நள்ளிரவு அளவில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் தொடர்ந்தும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றையதினம் (09) நாட்டின் வடக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, அநுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



மேல், வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறு அறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும்(07N - 15N, 80E – 86E) தெற்கு கடற்பரப்புகளிலும்(02N - 06N, 78E – 86E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Post a Comment

0 Comments