கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பெரேராஇந்த அசாதாரண மின்கட்டண அதிகரிப்பில் அனைத்து பொருட்களும் சேவைகளும் காலவரையறையின்றி அதிகரிப்பதாகவும், அதனை மக்கள் தாங்கிக்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்தார்.
30 யூனிட்டுக்கு குறைவாக மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் தற்போது 360 ரூபாய் செலுத்துகிறார்கள், ஆனால் விலையை உயர்த்தினால் 2000 ரூபாய் செலுத்த வேண்டும்.
30-60 யூனிட் வரை உபயோகிப்பவர்கள், இப்போது 780 ரூபாய் செலுத்துகிறார்கள். இவர்கள் 3310 ரூபாய் செலுத்த வேண்டும்.
60-90 யூனிட் வரை பாவிப்பவர்கள், இப்போது 1800 ரூபாய் செலுத்தினால், எதிர்காலத்தில் 4860 ரூபாய் செலுத்த வேண்டும். மக்கள் இன்று இருளில் தவிக்கின்றார்கள் என்ற அச்சத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குப் புறமுதுகு காட்டி நிற்கின்றார்கள் இங்கு பெரும் குழப்பம் நிலவுகின்றது” என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழுவின் மேல்மாகாண பிரதிநிதி நிஷாந்த பிரித்திராஜ் தெரிவித்தார்.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் 20000 வியாபாரங்கள் மூடப்படும் ! என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments