Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

200MP கேமரா.. அறிமுகமாகும் ரெட்மி நோட் புரோ 12 சீரிஸ் மொபைல்கள்! முழுவிபரம்



ஜியோமி இந்தியா 200MP-கேமரா மொபைல் உட்பட Redmi Note 12 சீரிஸை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பொங்லின் சிறப்பு ஆஃபர்களோடு சந்தைக்கு வரும் இந்த மொபைல்கள் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

ஜியோமி இந்தியா நிறுவனம் Redmi Note 12 சீரிஸில் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் Redmi Note 12, Note 12 Pro மற்றும் Note 12 Pro+ முதலிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு பியூச்சர்களோடு அறிமுகத்திற்கு வந்துள்ளது.



Note 12 Pro+ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை கேமராவிற்காகவே மொபைல் வாங்கும் பெருவாரியான வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 200MP HPX கேமரா சென்சாருடன் மற்றும் OIS, 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிடி 1080 5G SoC மற்றும் 120W ஹைப்பர்சார்ஜ் முதலிய பியூச்சர்களோடு சந்தையில் ரூ.16,499 இல் இருந்து தொடங்குகிறது.

ஜியோமியின் புதிய 200எம்பி கேமரா ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்-ன் ஸ்மார்ட் பியூச்சர்ஸ்,



* நோட் 12 ப்ரோ பிளஸ் - பின்புறம் கண்ணாடியாலான பிளாஸ்டிக் ஃபிரேமை கொண்டுள்ளது. ஆனால் கேமரா ஹவுஸிங் ஆனது உலோகத்தால் கவரிடப்பட்டுள்ளது.

* 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 1080p தெளிவுத்திறன் மற்றும் டால்பி விஷன் பிளேபேக் சப்போர்ட் உள்ளது.

*ரெஃப்ரஸ் ரேட் 120Hz மற்றும் அதிகபட்ச பிரைட்னஸ் 90nits.

*ஹூட்டின் கீழ், நீங்கள் MediaTek-ன் டைமன்சிட்டி 1080 சிப்பைப் பெறுவீர்கள்.

* 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்.



* ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 சாஃப்ட்வேர். ஜியோமி இரண்டு வருடத்திற்கு OS மற்றும் 4 வருடத்திற்கு செக்யூரிட்டி அப்டேட் ஆஃபரை வழங்குகிறது.

* முக்கிய அம்சமாக OIS உடன் 200MP ரியர் கேமரா.

* மேலும் 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளது. 16MP ஃபிரண்ட் கேமராவும் இருக்கிறது.

*ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவற்றுடன் கூடுதலாக இரட்டை ஸ்பீக்கர்கள் இருக்கின்றன.

*120W வேகமான சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியால் ஆனது.



*Xiaomi இந்தியாவில் இந்த போனை ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விலையானது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உடன் உள்ள ஸ்மார்ட்போனிற்கானது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடனான மாடல் ரூ.32,999 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நோட் புரோ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து சந்தைக்கு வருகின்றன.

Post a Comment

0 Comments