Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வாரிசின் வாரி குவிக்கும் வசூல் உலகம் முழுவதும் சுமார் ரூ.210 கோடி…!!


வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விஜய்யின் வாரிசு 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், வாரிசு திரைப்படம் கடந்த ஒரு வாரத்தில் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ வெங்கடேஷ்ரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 7 நாட்களில் 3 மடங்காக உங்கள் அன்பை வாரிசு திரைப்படம் பெற்றுள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.210 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments