சோமாலியாவின் ஹிரான் மாகாணத்தில் நடத்தப்பட்ட இரு கார் குண்டு தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களில் மேலும் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் பிரதி பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அல் கைதாவுடன் தொடர்புடைய அல் ஷபாப், இந்த கார் குண்டு தாக்குதல்களுக்கு பொறுப்பு கூறியுள்ளது.
தமது வீடு மற்றும் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரும் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக Mahas மாவட்ட பொலிஸ் ஆணையாளர் கூறியுள்ளார்.
அதேநேரம், Mahas நகர மேயர் மற்றும் சந்தை என்பன இலக்கு வைக்கப்பட்டு இரண்டாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவொரு பயங்கரமான தாக்குதல் என சம்பவத்தை நேரில் கண்டவர் AFP-இற்கு தெரிவித்துள்ளார்.
0 Comments