Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்த முஜிபுர் ரஹ்மான்...!


பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றில் இன்று (20) அறிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தாம் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுத் தீர்மானத்திற்கு அமைவாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதாக முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

நாட்டில் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதுடன் மக்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்தாதிருக்க வேண்டாம் என்றும் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

தேர்தலுக்கு இடையூறு விளைவிக்காமல் தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் இன்றைய(20) தமது பாராளுமன்ற உரையில் கோரிக்கை விடுத்தார்.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments