Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நாடாளுமன்றம் முற்றுகை! அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்!


பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த முன்னாள் அதிபர் போல்சனேரோவின் வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

பிரேசில் நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மிகக்குறைந்த வாக்கு வித்தியாசமே இருந்த நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், போல்சனேரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். தேர்தலில் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, நாடாளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு, ஜனாதிபதி மாளிகை முன் திரண்டதால் பிரேசிலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments