வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேசிய வன பூங்காக்களில் டொலரை செலுத்தி நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதார வளரச்சிக்காக டொலர்களை ஈட்டிக்கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக, யால சரணாலயத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
அத்துடன், யால சரணாலயத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அவசியமான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இரண்டு விடுதிகள் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன.
பகல் வேளைகளில் சரணாலயம் மூடப்பட்டிருக்கும் 2 மணித்தியால காலப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுப்பதற்கான அறையை அமைக்கும் பணி விரைவில் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments