Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றம்...!


எந்தவொரு நாட்டில் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கக்கூடிய 'போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம்' அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் கையெழுத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சட்டத்தைப் பொறுத்தமட்டில், அதனூடாக அமெரிக்காவிற்குள் அல்லது அமெரிக்காவிற்கு வெளியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்கப்பிரஜைகள் அல்லது அமெரிக்க இராணுவத்தில் (படைப்பிரிவில்) அங்கம் வகிப்பவர்களை மாத்திரமே விசாரணைக்குட்படுத்தித் தண்டிக்கமுடியும்.

இருப்பினும் தற்போது மேற்கூறப்பட்டவாறு அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் எந்தவொரு நாட்டிலேனும் போர்க்குற்றமிழைத்த எந்தவொரு நாட்டைச்சேர்ந்தவராக இருப்பினும், அவர் அமெரிக்காவில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதற்கமைய போர்க்குற்றமிழைத்த நபர் (எந்தவொரு நாட்டைச் சேர்ந்தவரெனினும்) அமெரிக்காவில் இருக்கும் பட்சத்தில், சட்டமா அதிபர் மற்றும் பிரதி சட்டமா அதிபரின் எழுத்துமூல அனுமதியுடன் அந்நபருக்கு எதிராக வழக்குத்தொடரும் அதிகாரம் அமெரிக்க அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறெனினும் குறித்த நபருக்கு எதிராக வழக்குத்தொடர முன்னர், அந்நபருக்கு எதிராகப் பிறிதொரு நாட்டில் வழக்குத்தொடர்வதற்கான சாத்தியப்பாடு குறித்து சட்டமா அதிபரால் ஆராயப்படும்.

Post a Comment

0 Comments