மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமாயின் அதேநேரத்தில் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குடிநீர் பம்ப் செய்ய மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீர் விநியோகத்திற்கான மின் கட்டணத்திற்கு நிவாரணம் வழங்கினால், நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு இதுவரையில் எட்டப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
0 Comments