Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு... நன்றி தெரிவித்த ஸ்டாலின்!


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, உடல்நலக்குறைவால் கடந்த ஜன. 4ஆம் தேதி மறைந்தார். அவரின் மறைவைக்கு பின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்.27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இம்முறை தேர்தலை சந்திக்கப்போவதில்லை என்றும் அதிமுக உள்பட யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பாஜக தரப்போ அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறது.

இதில், அதிமுகவின் இரு அணிகளும் இடைதேர்தலை சந்திக்க உள்ளதால், யாருக்கு யார் ஆதரவு என்று பெரும் குழப்பம் நிலவிவருவதாக தெரிகிறது. இரு தரப்பும் வேட்பாளரை தேர்வு செய்ய மும்முரமாக இருந்த வரும் வேளையில், மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக திமுக கூட்டணி அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தொகுதியை தக்கவைக்க அக்கட்சியினர் பரப்புரையையும் தொடங்கிவிட்டன.

அந்த வகையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். மேலும், கமல்ஹாசன் தங்களுக்கு ஆதரவளிப்பார் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தல் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments