கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க நேரப்படி காலையில், விமானிகள் மற்றும் விமானங்கள் இயக்கம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கும் நோடம் (NOTAM) என்ற அமைப்பு செயல் இழந்து விட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த அமைப்பு, ஆபத்துகள், விமான சேவையில் உள்ள மாற்றங்கள், அது குறித்த தகவல்களை அளிக்கும். இந்நிலையில், உரிய தகவல்களை அளிக்காத காரணத்தினால், இந்த நேரத்தில் விமானங்களை இயக்க முடியாது எனக்கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அனைத்து விமானங்களும் விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மற்றும் அங்கு செல்லும் என 400 விமானங்கள் தாமதமாகி உள்ளன.
0 Comments