சவூதி அரேபியாவில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரட்டை கோல் புகுத்தியபோதும் அவரது ரியாத் நட்சத்திர அணியை மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் 5–4 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சவூதித் தலைநகர் ரியாதில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் மிகச் சிறந்த வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ எதிர்கொண்டதோடு இந்த இருவரும் எதிர்கொள்ளும் கடைசி போட்டியாகவும் இது அமையலாம் என்று நம்பப்படுகிறது.
இதில் மெஸ்ஸி முதல் கோலை பெற்றபோதும் ரொனால்டோ இரட்டை கோல் புகுத்த முதல் பாதியில் போட்டி 2–2 என சமநிலை பெற்றது. எனினும் போட்டி ஒரு மணி நேரத்தை எட்டும் நிலையில் இரு வீரர்களுக்கும் பதில் வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி மேலும் நான்கு கோல்களை புகுத்தி வெற்றியீட்டியதோடு ரியாத் நட்சத்திர அணி கடைசி வரை கடும் சவால் கொடுத்தது. இந்தப் போட்டியை பார்க்க மன்னர் பஹாத் அரங்கில் 69,000க்கும் அதிகமான ரசிகர்கள் கூடியதோடு போட்டியை பார்ப்பதற்கு ஏலத்தில் விடப்பட்ட டிக்கெட் ஒன்றை தொழிலதிபர் ஒருவர் 2.6 மில்லியன் டொலருக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
STAR 'செய்திகள்'
0 Comments