ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்கு முக்கியமான அதுவும் இடியை இறக்கக் கூடிய அளவுக்கான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அது என்னவெனில் வாரன்ட்டி முடிந்த ஐஃபோன் பேட்டரியை மாற்றுவதற்கான விலையை அதிகப்படுத்தியிருக்கிறது.
வரும் பிப்ரவரி 2023ம் ஆண்டு வரையில் வாரன்ட்டி முடிந்த ஐஃபோன்களுக்கான பேட்டரியை மாற்ற பழைய விலையே தொடரும் என்றும், மார்ச் 1ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட விலை அமலுக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பேட்டரி மாற்றுவதற்கான விலை இதுவரை 69 அமெரிக்க டாலராக இருந்த நிலையில் மார்ச் 1 முதல் 20 டாலர் அதிகப்படுத்தப்படுவதாகவும், இது ஐஃபோன் 14 மாடல்களுக்கு முந்தைய அனைத்து ஐஃபோன்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் applecare அல்லது applecare+ போன்ற திட்டங்களை மேற்கொள்ளாதவர்களே இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்கள். அதாவது பெரும்பாலான ஐஃபோன் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விலை ஏற்றத்தால் பாதிப்படையப்போவது உறுதியாகியிருக்கிறது.
அதே சமயத்தில் apple care அல்லது apple care+ பிளான்களை வைத்திருப்போர் 80% கீழ் பேட்டரி ஹெல்த் இருந்து அதனை மாற்றவேண்டுமென்றால் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
0 Comments