Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இரு இருமல் மருந்துகளுக்கு தடையா..?!


உஸ்பகிஸ்தானில் 19 உயிரிழப்புகளுடன் தொடர்புபட்ட இந்தியாவின் மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இரு இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Ambronol மற்றும் DOK-1 Max என்ற இந்த இரு இருமல் மருந்துகளிலும் நச்சுப் பொருளான எத்திலீன் கிளைக்கோல் இரசாயனம் இருப்பது உஸ்பகிஸ்தான் சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்துகள் குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்களுக்கு பயன்படுத்த உகந்ததல்ல என்று குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு, இவைகளின் பயன்பாட்டை கைவிடும்படி உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் உஸ்பகிஸ்தானில் இடம்பெற்ற மரணங்களை அடுத்து உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மரியான் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தியை இந்திய சுகாதார அமைச்சு இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments