Trending

6/recent/ticker-posts

Live Radio

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி...!


மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு இன்று(09) அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை குழுவொன்றினூடாக மீளாய்வு செய்து, இயலுமானால் மின் கட்டணத்தை மீண்டும் குறைப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனை இன்று(09) மாலை கிடைக்கப்பெற்றதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நன்றி...
News 1st

Post a Comment

0 Comments