கிராக் பார்ட்டி படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி டுவிட்டரில் படத்தில் பணியாற்றிய அனைவரின் பெயரை குறிப்பிட்டு பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால் கதாநாயகியாக நடித்திருந்த ராஷ்மிகா பெயரை மட்டும் அவர் குறிப்பிடவில்லை.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராஷ்மிகாவை முதன் முதலில் கிராக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு ராஷ்மிகா மீது இன்னும் கோபம் குறையவில்லை. ரிஷப் ரெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து அனைத்து மொழிகளிலும் வெளியான காந்தாரா படம் பெரிய அளவில் வசூல் குவித்து இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்தது.
ஆனால் அந்த படத்தை நான் பார்க்கவில்லை என்று ராஷ்மிகா கூறியதால் அவருக்கு எதிராக கன்னட ரசிகர்கள் பொங்கினர். ராஷ்மிகாவுக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. பின்னர் படத்தை பார்த்து விட்டேன் என்று அவர் கூறிய பிறகு எதிர்ப்பு அடங்கியது. இந்த நிலையில் கிராக் பார்ட்டி படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி டுவிட்டரில் படத்தில் பணியாற்றிய அனைவரின் பெயரை குறிப்பிட்டு பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால் கதாநாயகியாக நடித்திருந்த ராஷ்மிகா பெயரை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. இதனால் ரிஷப் ஷெட்டி, ராஷ்மிகா மோதல் இன்னும் புகைந்து கொண்டு இருப்பதாக கன்னட ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
0 Comments