Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தான் ஒரு தனித்துவமான வீரர்: சவூதியில் ரொனால்டோ ...!


தான் ஒரு தனித்துவமான கால்பந்தாட்ட வீரர் என போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். அத்துடன், ஐரோப்பாவில் அனைத்து சாதனைகளையும் தான் முறியடித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இங்கிலந்தின் மென்செஸ்டர் யுனைடெட், ஸ்பெய்னின் றியல் மெட்றிட், இத்தாலியின் ஜுவென்டஸ் முதலான கழகங்களில் ரொனால்டோ விளையாடினார்.

பின்னர் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட்டில் 2021 ஆம் ஆண்டு அவர் இணைந்தார். எனினும், அக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பயிற்றுநருடன் ஏற்பட்ட முரண்பாடுகளையடு;தது அவர் விலகினார்.



தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் ரொனால்டோ இணைந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை, ரொனால்டோவுக்கு அக்கழகம் நேற்றுமுன்தினம் விமர்சையான வரவேற்பு அளித்தது. றியாத் நகரிலுள்ள, அல் நாசர் கழகத்தின் மிர்சூல் பார்க் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் தனது மனைவி ஜோர்ஜியானா ரொட்றிகஸ் மற்றும் பிள்ளைகளுடன் ரொனால்டோ கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் ரொனால்டோ பேசுகையில், தனது கால்பந்தாட்ட வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்றார்.

'அங்கு (ஐரோப்பாவில்) அனைத்து சாதனைகளையும் நான் முறியடித்துவிட்டேன். இங்கே சில சாதனைகளை முறியடிக்க விரும்புகிறேன்' எனவும் ரொனால்டோ தெரிவித்தார்.



'எனது கால்பந்தாட்ட வாழ்க்கையின் முடிவில் நான் ஐரோப்பாவில் எனது வேலை செய்து முடிக்கப்பட்டு விட்டது. ஐரோப்பா, பிரேஸில், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, போர்த்துகலில் பல அழைப்புகள் எனக்கு கிடைத்தன. என்னை ஒப்பந்தம் செய்வதற்கு பல கழகங்கள் முயற்சித்தன. ஆனால் நான் இக்கழகத்துக்கு நான் சம்மதம் தெரிவித்தேன்' என ரொனால்டோ கூறினார்

மனைவி ஜோர்ஜியானா ரொட்றிகஸ் மற்றும் பிள்ளைகளுடன் ரொனால்டோ kidAFP Photo

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments