அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முழுவதும் இன்று விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும், விமான சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அமெரிக்க விமான போக்குவரத்து அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. அமெரிக்க விமான போக்குவரத்து அமைப்பில் 'நோட்டம்' என்ற தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டம் தொழில்நுட்பம் விமான ஓடுதளத்தில் விமானம் இறங்குவது மற்றும் அது தொடர்பான விவரங்களை விமானிக்கும், பிற விமான ஊழியர்களுக்கும் அளிக்கும் தொழில்நுட்பமாகும்.
இந்த தொழில்நுட்பத்தில் இன்று திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் (அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.30 மணி) அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறக்கப்பட்டன.
விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 400க்கும் அதிகமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது/ புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட காரணம் என்ன? இதில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு இன்னும் சரிசெய்யப்படாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளான நிலையில் அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
0 Comments