Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வலதுபக்க அடிவயிறு வலிக்கிறதா? இந்த பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம்!



சிலருக்கு வலதுபக்க அடிவயிற்றில் அடிக்கடி வலி ஏற்படும். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர். ஆனால் இந்த வலியானது பல்வேறு உடல்நல பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மார்பு மற்றும் இடுப்பு இடையிலான வயிற்றுப்பகுதியில்தான் செரிமான மண்டலம், குடல், கல்லீரல் உள்ளிட்ட பல முக்கியமான பல உறுப்புகள் அமைந்துள்ளன.

இதுதவிர, வலதுபக்க அடிவயிற்றுப்பகுதியில்தான் பெருங்குடல் மற்றும் பெண்களுக்கு வலது கருப்பை போன்ற முக்கிய உறுப்புகள் அமைந்துள்ளன. தொற்று மற்றும் பிற உடல்நல பிரச்னைகளால் உடல் உறுப்புகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக வலதுபக்க அடிவயிற்று பகுதியில் வலி ஏற்பட்டால் அது கீழ்க்கண்ட சில முக்கிய பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம் என விளக்குகின்றனர் நிபுணர்கள்.

குடல் அழற்சி (Appendicitis)

வலதுபக்க அடிவயிற்றின் குறிப்பிட்ட பகுதியில் வலி இருந்தால், அது குடல் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். பெருங்குடலை ஒட்டி டியூப் போன்ற உறுப்பு ஒன்று வளர்வதை குடல் அழற்சி என்கின்றனர். இந்த பிரச்னை ஏற்பட்டால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். நிறையப்பேருக்கு தாங்கமுடியாத வலி ஏற்படும். உடனடியாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஒட்டுக்குடலை அகற்றுவது அவசியம்.



சிறுநீரக கற்கள்

சிறுநீரகத்தில் அதிகப்படியான கால்சியம் சேர்வதால் கற்கள் உருவாகின்றன. இதனை நெஃப்ரோலிதியாசிஸ் என அழைக்கின்றனர். சிறுநீரக கற்கள் ஒரே அளவில் இருப்பதில்லை. சிறுகற்களை மருத்துவர்கள் மருந்துகள் மூலம் சிறுநீர்க்குழாய் வழியாகவே வெளியேற்றிவிடுவர். ஆனால் பெரிய கற்களை அப்படி அகற்றமுடியாது. அது அடிவயிறு மற்றும் முதுகு, பக்கவாட்டு பகுதி, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

குடல் எரிச்சல் சிண்ட்ரோம் (IBS)

குடல் எரிச்சல் சிண்ட்ரோமானது ஒரு நாள்பட்ட பிரச்னை. இது செரிமான மண்டலத்தை பாதிக்கும். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 12% மக்கள் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. IBS-ஆனது தீவிர வயிற்று வலி, குடல் இயக்கத்தில் மாற்றம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுப்பொருமல் மற்றும் மலத்தில் சளி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.



மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி அல்லது பிடிப்பாலும் அடிவயிற்று வலி ஏற்படும். இந்த வலியானது மாதவிடாய்க்கு முன்போ அல்லது மாதவிடாயின்போதோ ஏற்படும். தசைபிடிப்பு பொதுவானதுதான் என்றாலும், வயிற்றின் இரண்டு பக்கவாட்டிலோ அல்லது அடிவயிற்றிலோ வலி ஏற்படும். இந்த வலி சில பெண்களும் மிகவும் மோசமானதாக இருக்கும். வலி தவிர, குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி போன்றவையும் ஏற்படும்.

கேன்சர்

அடிவயிற்று வலி அல்லது தொப்புள்பகுதிக்கு மேல் அசௌகர்யமானது வயிற்றில் கட்டி உருவானதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் வயிற்றுப்பகுதியில் வீக்கம் அல்லது நீர்கோர்த்தல் போன்றவையும் கேன்சருக்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. வலி தவிர அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவையும் கேன்சர் அறிகுறிகள் என்கிறது அமெரிக்கன் கேன்சர் இன்ஸ்டிடியூட். வயிற்றுப்பகுதியில் கேன்சர் கட்டிகள் உருவானால் ஆரம்பகட்டத்தில் அறிகுறிகள் அதிகளவில் தென்படாது.

Post a Comment

0 Comments