Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நாட்டின் வேலைவாய்ப்பு முகமைகள் பற்றிய தீர்மானம்...!


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் உரிமங்களை கடுமையாக கண்காணிப்பது குறித்து அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவின் உப குழு கவனம் செலுத்தியது.

இதேவேளை, வெளிநாட்டு தொழிலாளர் சந்தைக்கு தரமான தொழிலாளர்களை வழங்கும் நோக்கில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கூட்டுத் திட்டத்தை தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குக் குழுவின் உப குழு தெரிவித்துள்ளது.

தரம் மற்றும் திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிந்துரைப்பது தொடர்பாக அமைச்சுகளுக்கிடையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்கான அரசாங்கக் கணக்குகளுக்கான உபகுழுவின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் கடந்த (19) பாராளுமன்றத்தில் வெளிநாட்டு வேலைகள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்தக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றது.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments