Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இலவச டிக்கெட்!-பாகிஸ்தான் கிரிக்கெட்டின் 'கலகல'..!


பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி மோசமான ஆடுகளத்தின் காரணமாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டிக்காக ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபெற்று விளையாடியது. முதல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் சேர்ந்து 1768 ரன்களை அடித்து குவித்தனர். அந்த ஒரு போட்டியில் மட்டும் போட்டியில் 6 வீரர்கள் சதங்களை பதிவு செய்தனர். போட்டியில் முடிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஆடுகளத்தின் தன்மை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் அணி வீரர் அப்ரிடி கூட இந்தமாதிரி ஆடுகளங்கள் எங்களது பந்துவீச்சாளர்களின் உறுதியான மனநிலையை உடைத்துவிடும் என்று கூறியிருந்தார். அந்தவகையில் பாகிஸ்தான் நாட்டின் ஆடுகளங்கள் விமர்சனத்திற்கு ஆளாகின.



இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெற்று விளையாட பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து அணி.

மந்தமாக மாறிய நியூசி-பாக் முதல் போட்டி!



முதல் போட்டி கடந்த டிச.26 ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், லோயர் ஆர்டர் பேட்டர் ஆஹா சல்மான் மற்றும் 3 வருடங்களுக்கு பிறகு அணிக்குள் திரும்பி இருக்கும் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது மூவரின் அற்புதமான ஆட்டத்தால் 438 ரன்களை குவித்தது.



சிறப்பான பேட்டிங் செய்த பாபர் அசாம் மற்றும் ஆஹா சல்மான் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அனைத்து பேட்டர்களும் சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்த நல்ல அடித்தளத்தை அமைத்தது, பின்னர் மிடில் ஆர்டராக வந்த நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் இரட்டை சதமடித்துஅ அசத்த 612 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.

கடைசி 1 மணி நேரத்தில் டிக்ளேர் செய்த பாகிஸ்தான்- ஷாக் கொடுத்த நியூசிலாந்து

174 ரன்கள் பின்னிலையில் இருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடியது. போட்டியின் கடைசி நாளான 5ஆவது நாளின் கடைசி ஒரு மணி நேரம் மட்டுமே மீதமிருந்த நிலையில் போட்டியை 318 ரன்கள் அடித்திருந்த போது டிக்ளேர் செய்தார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.



கடைசி 1 மணி நேரத்தில் 138 ரன்களை இலக்காக கொண்டு 14-15 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஓபனர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிகள் சிக்சருக்கு அனுப்ப 7 ஓவர்களிலேயே 61 ரன்களை குவித்து பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

வெளிச்சமின்மையால் டிரா செய்யப்பட்ட போட்டி- தப்பித்த பாகிஸ்தான்!



இந்நிலையில் போட்டி இறுதியில் நியூசிலாந்து அணிக்கே வெற்றிக்கு சாதகமான நிலை ஏற்பட்டது. ஆனால் மைதானத்தில் வெளிச்சம் குறைந்த காரணத்தினால் போட்டி கைவிடப்பட்டு ஆட்டம் சமனில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

விமர்சினத்திற்கு ஆளான பாபர் அசாம்- செய்தியாளரின் கேள்விக்காக நிதானம் இழந்து முறைத்து பார்த்தார்!



கடைசி 15 ஓவர்கள் இருக்கும் போது 138 ரன்களுக்கு டிக்ளேர் செய்யப்பட்டதை நோக்கி கேள்வி மேல் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், பாபர் அசாமை கடினமான சூழலுக்கு தள்ளினர். இந்நிலையில் அவர் பேட்டியை முடித்து கொண்டு எழுந்து செல்ல முயலும் போது,” இது முறையல்ல, உங்களிடம் கேள்வி கேட்க நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என சொல்ல கோபமடைந்த பாபர் அசாம், அவரை முறைத்து பார்த்துவிட்டு வெளியேறினார்.

விமர்சனம் செய்யப்பட்ட போட்டியின் மைதானம்- பாகிஸ்தான் வாரியம் எடுத்த முக்கிய முடிவு!



போட்டியின் முக்கியமான சீட்டிங் செக்சனிலும் கூட பார்வையாளர்கள் இல்லாமலும், மோசமான ஆடுகளத்தின் விமர்சனங்களோடும் முடிவுக்கு வந்தது கராச்சியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி. இந்நிலையில் ”பார்வையாளர்களை மைதானத்திற்கு அழைத்துவரும் விதமாக அதே கராச்சி ஆடுகளத்தில் நடைபெற்விருக்கும் போட்டிக்கு அனைவருக்கும் நுழைவு சீட்டு இலவசம்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

இலவச நுழைவின் முக்கியம்சம்!

அனைத்துவிதமான சீட்டிங் செஸ்ஸனிற்கும் சேர்த்தே இந்த இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிபி வாரியம். அதாவது நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள், முக்கிய பிரபலங்கள் அமர்ந்து பார்க்கும் பிரீமியம் சீட்டிங் செஸ்ஸனிற்க்கும் இலவச நுழைவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இம்ரான் கான், ஷோயப் அக்தர், வாசிம் அக்ரம் என கிரிக்கெட் பிரபலங்கள் போட்டியை காண வந்திருந்தாலும் அவர்களுடனும் அமர்ந்து போட்டியை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும்.



மற்றும் உண்ணக்கூடிய பொருட்கள், பானங்கள், கண்ணாடி / பிளாஸ்டிக் பாட்டில்கள், பாகிஸ்தான் கொடி மற்றும் நியூசிலாந்து கொடிகள் தவிர வேறு எந்த கொடியும் பொருட்களும் மைதானத்தில் அனுமதிக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments