Trending

6/recent/ticker-posts

பெத்லஹாமில் பலஸ்தீன சிறுவன் சுட்டுக் கொலை…!


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெத்லஹாம் நகருக்கு அருகில் இஸ்ரேலிய படையினரால் பலஸ்தீன சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெட்ரோல் குண்டுகளை வீசியவர்கள் மீது இராணுவம் சூடு நடத்தியதாக அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (16) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 14 வயதான ஒமர் கமூர் என்ற சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இந்த மாதத்தில் இஸ்ரேலிய துருப்புகளின் ஊடுருவரில் கொல்லப்பட்ட இரண்டாவது சிறுவன் கமூர் ஆவார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளில் கடந்த ஆண்டு 200 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு குறைந்தது 26 இஸ்ரேலியர்கள் பலியாகினர்.

இந்த வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பதிவுகளை ஆரம்பித்தது தொடக்கம் அதிக உயிரிழப்புக் கொண்ட ஆண்டாகவும் 2022 பதிவானது.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments