இடதுசாரி அரசியல்வாதியான லூலா, முன்னதாக 2003 மற்றும் 2010க்கு இடையே ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். கடந்த ஒக்டோபரில் நடந்த தேர்தலில் பதவியில் இருந்த ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோவை அவர் தோற்கடித்தார்.
பொல்சொனாரோ பதவி ஏற்பு நிகழ்வை தவிர்க்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
மோசமான அழிவில் உள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாக தனது முதல் உரையில் அவர் உறுதி அளித்தார்.
நாட்டை பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது மற்றும் பொல்சனாரோ பதவிக் காலத்தில் மக்களிடையே ஏற்பட்ட பெரும் பிளவை சரிசெய்வது என லூலா பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளார்.
0 Comments