எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் சாலையோரம் வசிக்கும் மக்களை நயன்தாரா நேரில் சந்தித்து பரிசு பொருட்களை வழங்கினார்.
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது சர்ச்சையாகி பின்னர் அடங்கியது. சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் 'கனெக்ட்' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியானது. இந்த நிலையில் எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் சாலையோரம் வசிக்கும் மக்களை நயன்தாரா நேரில் சந்தித்தார். அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
நயன்தாராவிடம் பரிசு பொருட்களை வாங்க பெண்கள் முண்டியடித்தனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகிறது.
0 Comments