நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் COVID கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளின் பிரகாரம், நாட்டிற்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயமாகும்.
டிஜிட்டல் தடுப்பூசி அட்டை இல்லாதோர் PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நாட்டிற்குள் COVID 19 தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புதிய வழிகாட்டல்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றன.
0 Comments