Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமவுலியின் அடுத்த படம்...!


சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் உண்மையான பிரதிநிதித்துவத்தை உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.' போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற டைரக்டராக இருப்பவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்- நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

'பாகுபலி'யில் நடித்த பிறகே பிரபாஸ் மார்க்கெட் உயர்ந்தது. 'ஆர்.ஆர்.ஆர்.' படம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்துள்ளது.

ராஜமவுலியின் படங்களை வெளிநாட்டு மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடுகிறார்கள். தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது சூப்பர் மேன் கதை சாயலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராஜமவுலியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

படம் இன்னும் தொடங்கவில்லை, ஆனால் யூகங்களுக்கு பஞ்சமில்லை. பட்ஜெட், நடிகர்கள் தேர்வு, மேக்கிங் போன்ற செய்திகள் தினமும் வெளியாகி வருகிறது. ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் ராஜமவுலி கைகோர்த்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கலாம் என்று ஒரு புதிய தகவலும் உள்ளது.

ஒரு முக்கிய வேடத்தில் அமீர் கான் நடிப்பார் என்பது சமீபத்திய கிசுகிசு. அவரிடம் ராஜமவுலி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் சீனாவிலும் வெளியாகவுள்ளது.சீனா மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், ரஷியா, ஆஸ்திரேலியா, துபாய் என முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படத்தை வெளியிட இருக்கிறார் ராஜமவுலி. ஓடிடி நிறுவனங்களுடன் ராஜமவுலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த படத்தின் பட்ஜெட் செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி தயாரிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இப்படத்தை சர்வதேச தரத்திலும், லேட்டஸ்ட் டெக்னாலஜியிலும் சிறந்த முறையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் உண்மையான பிரதிநிதித்துவத்தை உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நன்றி…
தினத்-தந்தி

Post a Comment

0 Comments