Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இன்று முதல் 66% இனால் மின் கட்டணம் அதிகரிப்பு…!



இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தலைவர்.ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில், 66% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டதுடன், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அதன் உறுப்பினர்கள் பலர் இராஜினாமா செய்தனர்.

வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் இரண்டு தடவைகள் நியமிக்கப்பட்டதுடன், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க நேற்று கலந்துரையாடியிருந்தார்.

நன்றி…
Daily-Ceylon

Post a Comment

0 Comments