கேரளாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை கதையில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இதில் தொழில் அதிபரின் கதாபாத்திரத்தில் பிருதிவிராஜ் நடிக்க உள்ளதாகவும் வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.
சூர்யா ஏற்கனவே விமான நிறுவன அதிபர் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரான சூரரை போற்று படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் மீண்டும் கேரளாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை கதையில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இதில் தொழில் அதிபரின் கதாபாத்திரத்தில் பிருதிவிராஜ் நடிக்க உள்ளதாகவும் வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா பட மாக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் சமீபத்தில் பிருதிவிராஜ் வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது இந்த படம் குறித்து பேசியதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பிருதிவிராஜ் ஏற்கனவே தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் மூலம் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
0 Comments