Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இணையத்தில் வைரலாகும் ருத்ரன் பட பாடல்…!


ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ருத்ரன். இப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. 

மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ' பாடாத பாட்டெல்லாம்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ரீமிக்ஸ் பாடலான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments