2008 மற்றும் 2021 க்கு இடையில் 22 வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த சீனா 240 பில்லியன் டெலரை செலவிட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.
அந்நாடுகளில் பல சீனாவிடம் பல்வேறு திட்டங்களுக்காக கடன் பெற்றுள்ளதாகவும், அவற்றை திருப்பி செலுத்துவதில் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
குறித்த நாடுகளின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 2016 முதல் 2021 வரை மீண்டும் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தரவுகளின் அடிப்படையில் ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவ்வாறு கடன் பெற்ற நாடுகளில் இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments